மோட்டார் சைக்கிளுக்கு தின்னர் ஊற்றி ஓடியதால் நேர்ந்த அவலம்

இலங்கையில் ஒருவர், தொடர்ச்சியான பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக தனது மோட்டார் சைக்கிளுக்கு வீட்டில் மீதமாக இருந்த தினர் ஒரு பகுதியை ஊற்றி ஓடியிருக்கிறார்.

தின்னர் முடிந்த கையோடு மீண்டும் பெற்றோலுக்கான வேட்டையில் மூன்று லீற்றர்கள் பெற்றுள்ளார்.

அந்த பெற்றோலை தனது பைக்கிளுக்கு ஊற்றியதும் அது டாங்கியில் தங்கவில்லை. ஒழுக ஆரம்பித்தது.

ஒழுகிய பெற்றோலை மீண்டும் பாத்திரம் ஒன்றை வைத்து சேமித்துவிட்டு, பக்கத்து ரோட்டில் இருக்கும் சைக்கிள் திருத்துபவரிடம் சென்றிருக்கிறார்.

டாங்கியை பார்த்த திருத்துனர் கேட்ட முதல் வார்த்தை, – “தின்னர் ஊற்றி ஓடினீங்களா?” வெடிச் சிரிப்போடு டாங்கியை ஒட்டி முடித்துவிட்டு, கனத்த மனத்தோடு குறித்த நபர் வீடு திரும்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் இவ்வாறான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

Leave a Reply