வடக்கு, கிழக்கில் குண்டுத் தாக்குதல்; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வெளியிட்டுள்ள தகவல்!

வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதலொன்றோ அல்லது நாசகார செயல்களோ, வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றின் தலையீட்டுடன் இடம்பெறலாம் என்பது ஒரு தகவல் மட்டுமே என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலருக்கு அனுப்பிய கடிதத்தை மையப்படுத்தி இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் விளக்கம் கோரியது. அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ,

பொலிஸாருக்கு இவ்வாறான தகவல்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து கிடைக்கும். அவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டிருந்தமையால், அது தொடர்பில் பாதுகாப்புச் செயலருக்கு அறிவிக்கப்பட்டது.

அது ஒரு தகவல் மட்டுமே. அந்த தகவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உறுதி செய்துகொள்வதற்காக, அனைத்து உளவுத் துறைகளுக்கும் பகிர்ந்துகொள்வதன் நோக்காக கொண்டு பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட அந்த தகவல் பாதுகாப்பு செயலரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. என தெரிவித்தார்.

நாளை மறுதினம் அல்லது 7 ஆம் திகதி வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதலொன்றோ அல்லது நாசகார செயல்களோ, வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றின் தலையீட்டுடன் இடம்பெறலாம் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் ஜெனரால் கமல் குணரத்னவுக்கு அறிவித்துள்ள நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply