மின் உற்பத்திக்கு நீரை பயன்படுத்த தவறிய பொறியியலாளர்கள் பணிநீக்கம்!

கடந்த ஜூன் மாத தினம் ஒன்றில் மின்சார கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இடையூறு தொடர்பில் இரண்டு பொறியியலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

குறித்த தினத்தில் மின்சார உற்பத்திக்கான போதுமான நீர் இருந்தபோதும், டீசலைக் கொண்டே மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அனுமதியின்றி மின்சார விநியோகத்தில் தடையும் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இரண்டு பொறியியலாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply