மார்ச் மாத வன்முறை சம்பவங்கள்: கால எல்லை நீடிப்பு

கொழும்பு, ஜுலை 08

கடந்த மார்ச் மாதம் முதல் இடம்பெற்ற வன்முறை சம்பங்கள் தொடர்பில், முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட கால எல்லை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல்  மே மாதம் 15 ஆம் திகதி வரையியான காலப்பகுதியில், நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களினால், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழுவின் ஊடாக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன் (08) நிறைவடையவிருந்தது

இந்தப் பின்னணியிலேயே, முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply