யானை தந்தங்களை வெட்டியோரை தேடும் போலீஸ் நாய்கள்!

அநுராதபுரம் மகேஷக்யா யானை இறக்கும் தருவாயில் இருந்த போது, ​​அது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில், வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், யானை தந்தத்தை வெட்டிய நபரை கண்டுபிடிக்க உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்களை பயன்படுத்தி விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், யானை இறக்கும் வரை வனஜீவராசிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்தும், அதில் அலட்சியமாக இருந்தமை குறித்தும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்படும் என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் அமைச்சரிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply