இரண்டு நாட்களுக்கு எரிபொருள் இல்லை: IOC

கொழும்பு, ஜுலை 08

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை, தற்காலிகமாக இடைநிறுத்த லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் எரிபொருள் நிலையங்களுக்கு மீண்டும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், திருகோணமலையில் உள்ள தமது எரிபொருள் முனையங்கள் திறந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் கைத் தொழிற்துறை நிறுவனங்களுக்கு, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரை எரிபொருள் விநியோகிக்கப்படும் என  லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply