யாழ் நகரில்  நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு  டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் ,  லொறி என்பவற்றுக்கு  டீசல் விநியோகித்துக்கொண்டிருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர்.

அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர்.

Leave a Reply