பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை! – ஹிருணிக்கா அழைப்பு

பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவானது சட்டவிரோதமான ஒன்றாகும். போராட்டத்தை சிதைக்கும் நோக்கிலேயே இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நாள் நாட்டை மீட்பதற்கான நாளாகும். ஆகையினால் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஆட்சியாளர் எங்களை கண்டு அச்சமடைந்துள்ளார்.

எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் சோதனை செய்தால் அவரது சீருடையில் இருக்கும் இலக்கம் மற்றும் குறித்த அதிகாரிகை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வெளியில் செல்ல வேண்டாம் என்பதற்கான காரணத்தை அவர்களிடம் கேளுங்கள்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply