அமெரிக்காவிற்கு ஓட்டமெடுக்கும் கோட்டாபய! இராணுவ ஆய்வாளர் தகவல்

ஜனாதிபதி கோட்டாபய டுபாய்க்கு தப்பிச்செல்வதாகவும், அங்கிருந்து அமெரிக்காவிற்கு தப்பிச் செல்வதற்கு திட்மிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையில் இருக்க முடியாது. அவர்கள் இந்தியாவிற்கு சென்றால் இந்தியா உதவும்.

கோட்டாபயவை பொருத்தவரை அவர் டுபாய்க்குச் செல்வதாகவும் பின்னர் அமெரிக்காவிற்கு செல்வதாக கூறப்படுகின்றது.

அவர் அமெரிக்காவிற்கு செல்வதாக இருந்தால் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அவர் அமெரிக்காவிற்கு செல்வார்.

அவருக்கு எதிராக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அமெரிக்கா மீளப்பெற வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply