ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்-சாள்ஸ் MP
இன்றைய தினம் கோத்தாபாய அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தில் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் பொலீசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டமைக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊடகங்கள் என்பது தனித்துவத்துடன் உண்மை தன்மைகளை தமது ஊடக நிறுவனங்களின் ஊடாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதில் முன்னிப்பவர்கள். காட்டுமிராண்டித்தனமாக இவர்களை தாக்கியிருப்பதானது இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. இந்த ஊடகவியலாளர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி





