புனித ஹஜ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது! (படங்கள் இணைப்பு)

இஸ்லாம் மக்களின் புனித பண்டிகையான ஹஜ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

தற்போதுள்ள இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

இது உலகளவில் இஸ்லாம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும்.

புத்தளம்

புத்தளம் – அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் , கொத்பாவும் இன்று அல்காசிமி சிட்டி ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் என்.எம்.நவாஸிர் (ரஷாதி) தொழுகையையும் கொத்பாவையும் நடாத்தி வைத்தார்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் உட்பட ஆண்கள், பெண்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

கிண்ணியா

கிண்ணியாவில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மிகவும் அமைதியான முறையில் சிறப்பாக இன்று நடை பெற்றது.

ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கிண்ணியாக் கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று காலை ஆறு முப்பது மணிக்கு கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மருதமுனை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று ) காலை 6:15 மணிக்கு நடைபெற்றது.

இம்முறை கடற்கரை திறந்தவெளியில் இமாம் ஜமாத்தாக நடைபெற்ற புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல். முபாறக் (மதனி) நடாத்தினார்.

ஆண்கள், பெண்களுக்கு வெவ்வேறாக இட வசதிகள் ஒதுக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்கி சுபீட்சமா தேசமாக இலங்கை மீண்டு வருவதற்கு இந்த ஹஜ்ஜூப்பெருளாள் தினத்தில் அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டும் என இங்கு குத்பா பிரசங்கத்தை நிகழ்த்திய மௌலவி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

பிறசெய்திகள்

Leave a Reply