சபாநாயகரின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பு, ஜுலை 11

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு  மேலதிக படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று (11) பிற்பகல் நடைபெறவுள்ளது.

Leave a Reply