கோட்டாக்கோ ரணிலுக்கோ நாட்டை நிர்வகிக்க எந்த அருகதையுமில்லை – சந்திரசேகரம்

உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையான போராட்டத்தின் வெற்றியை இன்று மக்கள் சுவைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 69லட்சம் வாக்குகளை பெற்ற கோட்டாபாய ராஜபக்ச இன்று மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஜனாதிபதியாக காணப்படுகின்றார்.

எனவே இவ்வாறான நேரத்தில் கோட்டபாய ராஜபக்ச மற்றும் கள்ளத்தனமாக திருட்டு தனமாக நரித்தனமான வேலைகளை செய்து வந்த ரணில் விக்கிரமசிங்கவும் மக்களுக்கு தண்ணி காட்டி வருகின்றனர்.

நாட்டு மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கோட்டாவே வீட்டிற்கு செல் என போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேவேளை தற்போது கோட்டாவின் வீட்டுக்குள்ளும் நுழைந்து கோட்டாவை நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர்.

எனவே கோட்டாபாய ராஜபக்ச இனிமேல் நாட்டின் ஜனாதிபதியாக பிரதமராக பதவி வகிப்பதற்கு கோட்டாக்கோ ரணிலுக்கோ எந்த அருகதையுமில்லை என தெரிவித்தார்.

Leave a Reply