மட்டக்களப்பில் வயல் காணியில் கைக்குண்டு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி , மாவிலங்கத்துறையில் இன்று கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மாடு மேய்ப்பதற்காகச் சென்ற ஒருவர், வயல் காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று இருப்பதைக் அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து காத்தான்குடிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், கைக்குண்டை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply