பிரதமர் பதவி விலக மறுப்பது பொருத்தமற்றது: மரிக்கார் எம்பி

கொழும்பு,ஜுலை 11

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அவரை அங்கீகரிக்க மாட்டார்கள். சர்வதேசமும் அதனை வரவேற்காது. எனவே அடுத்த பிரதமராக சஜித் பிரேமதாசவையே நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் தயாராகவுள்ளது. அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மாத்திரமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும்.
மக்கள் ஆணையை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலக இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், அவரால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவி விலக மறுப்பது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply