கோட்டாக்கு எதிராக இளம் ஊடகவியலாளர் சங்கம் முறைப்பாடு!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக இளம் ஊடகவியலாளர் சங்கம் காவல் துறையில் முறைப்பாடு அறிக்கை ஒன்றை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முறைப்பாட்டு அறிக்கையில்,

கோட்டபாய ராஜபக்ஷ , பின்வரும் குற்றங்களைத் திட்டமிட்டு/உதவிசெய்து, உடந்தையாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாலும், சம்பவங்கள் குறித்து ஏற்கனவே பொலிஸில் புகார் செய்திருப்பதாலும், கோட்டபாய ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க , விமான நிலையம் மற்றும் கடற்படைக்கு அறிவிக்குமாறு உத்தரவிடுமாறு கோருகிறோம்.

1). 88/89 காலப்பகுதியில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மாத்தளை மாமிச கூடத்தில் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

2) வடக்கில் நிராயுதபாணியான பொதுமக்களை யுத்தம் என்ற போர்வையில் கொல்ல அனுமதி வழங்கி அந்த கொலையாளிகளை போர்வீரர்கள் என முத்திரை குத்தியமை

3) ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொன்றமை

4) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டமை

5) ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்திச் சென்று சித்திரவதை செய்தமை

6) ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு சித்திரவதை செய்தமை

7) ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மற்றும் மனைவி தாக்கப்பட்டமை

ஊடகவியலாளர் நாமல் பெரேரா தாக்குதல்

9) சிரச ஊடகம் தீ வைக்கப்பட்டமை

10) உதயன் ஊடகம் தீ வைக்கப்பட்டமை

11) இலங்கை’ ஈ’ ஊடகம் தீ வைக்கப்பட்டமை

12) மேலும் பல ஊடக நிறுவனங்களை எரித்தமை

13) வடக்கில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல் மற்றும் படுகொலை.

14)அரச நிறுவனங்களில் நிதி கொள்ளையடித்தல்

15) அரச அதிகாரிகளிற்கு தேவையற்ற கட்டளைகள் விடுத்தல்

16) நாடுகளிடையே முரண்பாடுகளை உருவாக்க சதி செய்தமை

17) வேறொரு நாட்டின் பிரஜையாக இருக்கும்போது ஆவணங்களை மாற்றுவது மற்றும் ஒருவர் இலங்கையின் குடிமகன் என்று காட்டுவது சட்ட விரோத செயற்பாடுகளை மேற்கொண்டமை

18) கொவிட் கால கட்டத்தில் மக்களை இறப்பதற்கு திட்டமிட்டு அனுமதித்தது.

19) வரிசையில் நின்று குடிமக்களை இறக்கும் முறையை உருவாக்குதல்

20) அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியது

21) ரதுபஸ்லவில் துப்பாக்கி சூடு நடத்தியமை

22) மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை

23) கட்டுநாயக்க ஆடைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு.

என்றவாறு குறித்த முறைப்பாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply