போராட்டக்களத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்-. இராதாகிருஷ்ணன் கண்டனம்!

ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும் அதேவேளை இன, மத சாயமற்ற மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும் எனவும் அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 9 ஆம் திகதியென்பது, இலங்கையில் மாற்றங்கள் நிகழும் நாளாக மாறியுள்ளது.

மஹிந்த மே 9 ஆம் திகதி பதவி விலகினார், பஸில் ஜுன் 9 ஆம் திகதி பதவியை விட்டு பறந்தார், பதவி விலகும் அறிவிப்பை ஜுலை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய அறிவித்தார்.

அதேவேளை பௌத்த பிக்குகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி , பௌத்த தேரர்களாலும், வாக்களித்த மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் இது முக்கிய திருப்புமுனையாகும்.

ஜனாதிபதி பதவி விலகுவதில் ஊடகங்களின் பங்கும் உள்ளது.நல்ல வேலையை அவை செய்துள்ளன. அப்படி இருக்கையில் போராட்டக்களத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே, தாக்குதல் நடத்தியமை கவலைக்குரிய விடயமாகும் எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply