அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இருப்பினும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டபாயவை உடனடியாக பதவி விலகுமாறும் அதுவரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்
‘காலி கிரிக்கெட் போட்டியில் வெற்றி
Galleumuwadora முடிவு நிலுவையில் உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

பிறசெய்திகள்





