
கொழும்பு,ஜுலை 11
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு பிரஜைக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்ட சிவில் ஆர்வலர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் ஆர்வலர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் பொதுமக்களின் எழுச்சி என்றும் இதற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் ஆர்வலர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி தேவையின்றி பலரின் உரிமைகள் மீறப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சார்பில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, கடந்த 9ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




