
திருவாளர் சுப்பிரமணியம் சுவாமி ட்விட்டர் மூலம் வெளியிடப்பட்ட கருத்தானது இலங்கை மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கை வாழ் குடி மக்களால் அகிம்சை வழியிலும் அமைதியான முறையிலும் போராட்டத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி கவிழ்க்கபட்டு விரட்டபட்டார்.
குறிப்பாக நல்லாட்சியை உருவாக்கி கொலை, கொள்ளை,அடித்தவர்களை மக்களால் வெளியேற்றபட்டார்கள். ஆனால் தற்போது இலங்கையில் யுத்தம் ஏதேனும் நடக்கவில்லை. இவர் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி ஊழலாட்ச்சி பேர்வழிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆகவே இவரின் கூற்றை உடனடியாக பகிரங்கமாக வாபஸ் பெற்றுக்கொண்டு எமது மக்களின் அறவழி போராட்டத்தை கௌரவ படுத்துவது அவரின் மனிதாபிமானத்திற்கு பொருத்தபாடுடையதாகும். என சாமிமலை பிரதேசத்தில் உள்ள ஹாட்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர் மோகன் கேட்டுக் கொண்டார்.
பிறசெய்திகள்




