நாட்டை விட்டு வெளியேறுகின்றார்களா ராஜபக்சக்கள்?

நாட்டை விட்டு வெளியேறுகின்றார்களா ராஜபக்சக்கள்?
ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்களா? என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களில் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமான சீட்டுப்பிரதிகளின் படங்கள் இணையங்களில் உலாவுகின்றன.

நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாக ஆட்சியில் இருந்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதையடுத்து முக்கிய பதவியில் இருந்த இருவர் ஏற்கனவே பதவியில் இருந்து விலகி இருந்தார்கள்.
நாளை 13 ஆம் திகதி ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபாய ராஜபக்சவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது தொடர்பில் தகவல் இல்லை.. நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் ராஜபக்சக்கள் வெளி நாடு செல்வதாக அவர்களின் பெயர்களில் விமானச்சீட்டுக்கள் சமூக ஊடகங்களில் உலாவுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply