
கொழும்பு, ஜுலை 12
சந்தைக்கு இன்றைய தினம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாளை முதல் ஏனைய இடங்களுக்கு எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 16 ஆம் திகதி 3,200 மெட்ரிக் டன் லிட்ரோ எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி அளவில் நாட்டின் எரிவாயு தேவையை 100 வீதம் பூர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.