வடமராட்சி, பருத்தித்துறை, சக்கோட்டை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 35 கிலோ கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கேரள கஞ்சா பொதிகள் இன்று அதிகாலை இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சா பொதிகள் மற்றும் மீன்பிடி படகு, சந்தேகநபர்கள் தப்பியோடிய நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
மேலும், இராணுவத்தால் மீட்கபட்டவை, பருத்தித்துறை பொலிஸாரிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.






