இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய யொஹானி!

இந்தியாவிற்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த யொஹானி த சில்வா மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்று இரவு 11.25 மணியளவில் மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவருக்கு விமான நிலையத்தில் வைத்து மக்கள் பூ மாலை அணிவித்து வரவேற்றிருந்தனர்.

அத்துடன், அவரது இந்திய பயணத்தின் போது இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியவர்களையும் சந்திருந்தார்.

மேலும், அவர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply