யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மேற்கொண்டுள்ளார்
வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளதோடு, அதற்கான கூட்டம் நாளை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், குறித்த கலந்துரையாடலுக்காக பொலிஸ் மா அதிபர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள், பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் நாளை ஆராயவுள்ளார்.
மேலும் அவர் , வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று நண்பகல் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறையில் தங்கியிருக்கியிருந்து நாளை கிளிநொச்சிக்குப் பயணமாகவுள்ளார்.
நாளைய கூட்டத்திற்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






