பண்டோரா பத்திரிகை தொடர்பான ஆதாரங்கள் ரஞ்சனிடம்! – திலீப் வெதாரச்சி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் பண்டோரா பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அமைச்சர் திலீப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்கவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தபின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், பண்டோரா பத்திரிகை வெளிப்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைக்கத் தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக ராமநாயக்க தன்னிடம் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார்.

இத்தகைய ஆதாரங்களை முன்னிறுத்தி அரசாங்கம் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply