நாட்டின் வளங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும்!

நம் நாட்டின் வளங்களை எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், அதை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என கிராமியச் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் தனது அலுவலகத்தில் கட்சி செயற்பாட்டாளர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அரசியல் நோக்கங்களுக்காக இத்தகைய முதலீட்டு வாய்ப்புகளை யாராவது எதிர்த்தால் அது நாட்டின் வளர்ச்சியைத் திருப்புவதற்கான முயற்சி.

இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு கட்சி சார்பற்ற தேசிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்கு பிறகு, சில தலைவர்கள் நாட்டுக்கு ஆதரவான தீர்மானங்களை அமுல்படுத்துவதை எதிர்த்தனர். இன்றும் எதிர்க்கிறார்கள். இது நாட்டுக்கு வளர்ச்சியை தரக்கூடிய திட்டமாக இருந்தால், அதை நாம் ஆதரிக்க வேண்டும்.

நம் நாட்டில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்த முடியாவிட்டால் நாம் என்ன செய்வது, நம்மிடம் தொழில்நுட்பம், பணம் இல்லையென்றால் வெளிநாட்டு முதலீட்டாளரை அழைத்து வந்து சட்டரீதியாக வளங்களை வழங்கி அதன் மூலம் நாட்டை உயர்த்துவதில் எத்தகைய தவறும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply