அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டிருந்தார்.
இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிரதமரின் மனைவி ஷpராந்தி ராஜபக்ச உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று நாட்டிற்கு வந்த சுப்பிரமணியன் சுவாமியை இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 72 ஆவது நிறைவையொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கிலும் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







