மற்றுமொரு இரகசிய ஒப்பந்தத்திற்காக சொந்த விமானத்தில் இலங்கைக்கு வந்திறங்கிய அமெரிக்கர்!

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தீவிரமாக அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார வாரியம் (CEB) கூட்டு தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் தனது தனியார் விமானத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

அமெரிக்காவின் நியூயோர்க் நிறுவனத்துடன் இலங்கை மின் துறை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மற்றொரு இணைப்பு கையெழுத்திடப்பட உள்ளதாக மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டணியின் செயலாளர் ரஞ்சன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க New Fortress Energy நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலங்கைக்கு வந்தது தொடர்பாக, அரசாங்கம் உறுதியான பதிலை அளிக்கத் தவறினால் இலங்கை மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் பாரிய கண்டன நடவடிக்கையைத் தொடங்க வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கை மின்சார வாரியத்தின் ஊழியர்களைப் பாதிக்கும் பிரச்சினை மட்டுமல்ல தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் பிரச்சினை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply