மாத்தளை – களுதாவளை பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது தம்பியை மூத்த சகோதரன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.
களுதாவளை, திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனுக்கு இம்மாதம் 21 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய மூத்த சகோதரனை மாத்தளை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






