புத்தல மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் அங்கு சுற்றியிருந்த வேலியை உடைத்து வாழைத்தோட்டங்களை அழித்துள்ளது.
இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடருவதாக மக்கள் தெரிவித்தனர்.
மேலும், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது






