இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஓய்வு பெற்ற கமல் குணரட்ண மற்றும் இலங்கை இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை இன்று புதன்கிழமை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில், இருதரப்பினரிற்கும் இடையில் உள்ள நெருக்கமான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக நினைவூட்டப்பட்டது.
அத்துடன், இந்திய – இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு உறவினை மேலும் வலுவாக்குவதற்கான புதிய மார்க்கங்களை கண்டறிவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த காலங்களில் சமாதான பணிகளுக்காக இலங்கைக்கு வந்து பலியாகிய இந்திய அமைதி காக்கும் படையணியின் தியாகம் நினைவு கூறப்பட்டது.
அந்த வகையில், இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத்தூபியில் , உயிர் நீத்த இந்திய இராணுவத்தினருக்காக மனோஜ் முகுந்த் நாராவன தனது அஞ்சலியினை செலுத்தினார்.






