நாவாந்துறையில் இருவருக்கிடையில் மோதல்: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவந்துறை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குருநகர் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் 24 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ள இந்நிலையில், குறித்த தாக்குதலில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமாகியுள்ளன.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply