செல்வச் சந்நிதியானை வழிபட்டார் பொலிஸ் மா அதிபர்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று நண்பகல் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இவர் நாளை கிளிநொச்சிக்குப் பயணமாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, கிளிநொச்சியில் நாளை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இக்கூட்டத்துக்கு, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply