ஆசிரியர்கள் சம்பள பிரச்சினைக்கு இறுதித் தீர்வு வேண்டும்!

பாடசாலைகளை இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜாயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுபோதினி குழுவின் அறிக்கை வர வேண்டும் எனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளை ஆரம்பிக்க இன்னும் 7 நாட்கள் இருப்பதால் கலந்துரையாடி உடனடியாக முடிவு ஒன்றை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply