நாய்களை கொன்று உண்ட தம்பதியினர் கைது!

பாணந்துறை – வாத்துவ பகுதி வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அதனை கொன்று இறைச்சியாக்கி சாப்பிடும் பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வகையில் ஆறு நாய்களைக் கொண்டு சென்ற தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தம்பதியினர் தெருநாய்களை பிடித்து, கொன்று இறைச்சியாக்கியதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply