வவுனியா, குடியிருப்பு குளவீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகளை நோயாளியொவருக்கு வழங்கியமையால் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.
வவுனியாவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலைக்குச் சென்று நேற்று சிகிச்சை முன்னெடுத்திருந்தமையுடன், மருந்தையும் பெற்றுச்சென்றிருந்தார்.
இந்நிலையில் அந்த மருந்தினை நேற்றையதினம் இரவு அவர் பயன்படுத்திய நிலையில் சுகயீனம் ஏற்பட்டதுடன் உடலில் சில மாற்றங்களையும் அவதானித்துள்ளார்.
இந்நிலையில், அந்த மருந்துகளை சோதித்து பார்த்தபோது, ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவை காலாவதியாகியுள்ளமையை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, இன்று காலை குறித்த வைத்தியசாலைக்குச் சென்ற அவர் அங்கு கடமையில் இருந்தவர்களிடம் விடயத்தை தெரியப்படுத்தியமையுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்.
அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதத்திற்கு பயன்படுத்தலாம் என நோயாளுக்கு தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பாவனையாளர் அதிகாரசபை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
காலாவதியாகிய சில மருந்துகளையும் மீட்டிருந்தமையுடன், வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம், மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையுடன், இவ்வாறு அலட்சியமான சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் மேலும் தொடராமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந் நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியரிடம் இது தொடர்பில் கேட்டபோது,
தமது வைத்தியசாலை இந்த தவறை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.







