வடக்கில் வேலையில்லாப் பிரச்சினையே வன்முறைக்கு காரணம்! பொலிஸ்மா அதிபர்

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் மா அதிபர் யாழ் ஆயரிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பொலிஸ் மா அதிபர், யாழ் மறைமாவட்ட ஆயரை இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின், ஊடகங்களிடம் யாழ். ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தற்போதைய பொலிஸ் மா அதிபர், எஸ்.எஸ்.பியாக, டி.ஐ.ஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர். அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும்.

அத்தோடு, இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

வேலையில்லாமல் இருப்போருக்கு பணம் தேவைப்படும் போது தான் அவர்களை திருடுவதற்கு தூண்டுகின்றது.

அதேபோல, பொலிஸார் பொதுமக்களுடன் கூடுதலாக பழகவேண்டும். மக்களுக்கு சேவை செய்யத்தான் பொலிஸார். இவர்கள் இராணுவம் அல்ல, எனவே மக்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணிநேரம் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும்.

அதனை செயற்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

முன்னைய காலத்தில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு நான் கூறி இருக்கின்றேன். அதனை ஆரம்பிப்பதோடு மாத்திரமல்லாமல், விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

500 பேர் மாத்திரமே தமிழ் பொலிஸார் கடமையாற்றி வருகிறார்கள். மேலதிகமாக தமிழ் பொலிஸார்; நமக்கு தேவையாக உள்ளார்கள்.

அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும். வடக்கிலிருந்து பொலிஸுக்கு விண்ணப்பிப்போருக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு, மொழிப் பயிற்சியும் வழங்கப்படும் என பொலிஸ் மா அதிபர் கூறியதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply