பொன்னாலை வந்தார் பொலிஸ் மா அதிபர் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று யாழில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

அந்தவகையில், யாழ். பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்கும் விஜயம் செய்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஆனால், அங்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபர் செல்வச்சந்நிதி, வல்லிபுரத்து ஆழ்வார் ஆலயங்களுக்கு சென்று அங்கும் வழிபாடுகளை முன்னெடுத்தபோது, அனைவரும் காலணிகளை வெளியே கழற்றிவிட்டு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவேளை, காங்கேசன்துறையின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் காலணிகளுடன் ஆலயத்திற்குள் சென்றிருந்தார்.

இது ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாகத்தான் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சந்தேகம் ஏற்படுகின்றது.

Leave a Reply