இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருந்தவர்.
அத்தோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவராவார்.
அதுமட்டுமல்லாது, பொருளாதார நிபுணரும், புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமியை சந்திக்கக் கிடைத்தமையையிட்டு, ஜனாதிபதி இதன்போது அவருக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். எனத் தெரியவருகின்றது.






