சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதற்காக திருகோணமலையில் தங்கியிருந்த 67 பேரில் 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கைதானவர்கள் இன்றைய தினம் திருகோணமலை நீதிவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
எனினும் குறித்த 64 பேரையும் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக நியூசிலாந்து செல்லும் நோக்கில் கடந்த 15 நாட்களாக திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த 67 பேரும் நேற்று கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.






