மேல் மாகாணத்தில் நியமக் காலம் முடிவடைந்த, வாகன வருவாய் உரிமத்தை புதுப்பிக்க சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை, நிறைவுப் பெறும் வாகனங்களுக்கான வருவாய் உரிமங்கள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் நவம்பர் 30 வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இந்நிலையில் இன்று புதன்கிழமை முதல் www.motortraffic.wp.gov.lk என்ற இணையதளம் மூலம் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் ஒன்லைன் மூலம் வாகன வருவாய் உரிமத்தை புதுப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் மரணம்!
உரம் வழங்கப்படாவிட்டால் விவசாயத்தைக் கைவிடுவோம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்






