இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 23 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 23 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு படகுகளில் வந்த 23 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் உள் நுழைந்த சமயமே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இன்று கொரோனா பரிசோதனையின் பின்னர் காரைநகரில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு விடப்பட்டு 14 நாட்களின் பின்பே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களின் தொடர் அத்து மீறலைக் கண்டித்து எதிர்வரும் 17ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடத்த கூட்டமைப்பு அழைப்பு விட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாண சாரதிகளுக்கான ஓர் அறிவிப்பு..!

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்லமுயன்ற கைதான 64 பேருக்கு விளக்கமறியல்

Leave a Reply