நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாபாடுவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 46, 40 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.






