கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பெண் இராணுவ குடும்பத்திற்கு புதிய வீடு கையளிக்கப்பட்டது!

பெண் இராணுவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இவ்வாறு படையினரால் வீடு முழுமையாக்கப்பட்டு  நேற்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு இராணுவத்தினரின் நிதி மற்றும்,   ஆளணியுதவியுடன் பூரணப்படுத்தப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்படது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய கலந்துகொண்டு வீட்டினை கையளித்ததுடன், அன்பளிப்பு பொருட்களையும் வழஙிகியிருந்தார். தொடர்ந்து மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

இதேவேளை குறித்த நிகழ்வில் 72வது இராணுவ தினத்தையொட்டி 20 குடும்பங்களிற்கு 2000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில்  முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய , 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்த்தன, பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இராணுவ சேவையில் இணைந்து 8 வடங்களாக சேவையில் ஈடுபட்டுள்ள குறித்த பெண் இராணுவ குடும்பத்திற்கு இவ்வாறு வீடு கட்டி கையளிக்கப்பட்டுள்ளதுடன், தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply