அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையின் 5 சிறைக் காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறை காவலர்களுக்கும், கைதியை பார்வையிட வந்த வெளிநபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சிறை காவலர்கள் ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.






