நாளை முதல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி!

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் சில நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மண்டபங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடையக் கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்துகொள்ளும் வகையில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வெளிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும், அவற்றில் மதுபாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரண சடங்குகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில விளையாட்டு நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply