ஒரேநேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அரபிக் கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா, ஆந்திரம் பகுதியை நோக்கி செல்லும். அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

ஒரேநேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply