தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை, கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கடந்த 11-ஆம் திகதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட குறித்த மீனவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

அங்கு, மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply