இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதோடு, தாக்குதலை மேற்கொள்ள முன்நகர்ந்து வந்த 4 இராணுவத்தினரை போராட்டக்காரர்கள் தூக்கிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் எடுத்து வேறொரு பகுதிக்கு கொண்டுசென்றிருப்பதாக தெரியவருகிறது.
இது ஒரு பாரதூரமான செயலாக மாறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கிருக்கும் காவல்துறையினரும் துப்பாக்கி பிரோகங்களை மேற்கொண்டு முன்நகர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் தொடர்ந்தும் நிலவி வருகிறது.
பிறசெய்திகள்





